அப்பா வயது கொண்ட நபரை திருமணம் செய்து கொண்டது ஏன்? இளம் பெண் சொன்ன உண்மை காரணம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் தன்னை விட 40 வயது அதிகமுடைய நபரை பணத்திற்காக திருமணம் செய்யவில்லை என்று அவரை திருமணம் செய்து கொண்ட இளம் பெண் உருக்கமாக கூறியுள்ளார்.

அமெரிக்காவின் Georgia மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி David(67)-Jayme Bowen(27). இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருப்பினும் தன்னை விட 40 வயது அதிகமுடைய நபரை Jayme Bowen பணத்திற்காகவே திருமணம் செய்து கொண்டார் என்று அவர் காதுபடவே பலர் பேசியுள்ளனர்.

இந்நிலையில் Jayme Bowen, நாங்கள் இரண்டு பேரும் கடின உழைப்பாளி, எங்கள் இரண்டு பேருக்கும் இருக்கும் நேரமும் சரியாக உள்ளது.

இதனால் நாங்கள் வேலையைப் பற்றி நினைக்க வேண்டியதில்லை. அவர் ஒரு நிலையானவர், நான் எப்போதும் அவரை சார்ந்திருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.

எனக்கு எது தேவை என்பது எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் நீண்டகாலமாக சந்தித்துக் கொண்டோம், புரிந்து கொண்டோம். அதன் பின்னரே திருமணம் செய்ய முடிவு செய்தோம் என்று கூறியுள்ளார்.

ஒரே அலுவலகத்தில் இருவரும் வேலை பார்த்து வந்த போது, சந்தித்து கொண்டனர். அதன் பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்தை குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் David கூறுகையில், எனக்கு தெரியும் என்னை விட மிகவும் குறைவான வயதுடைய பெண்ணை திருமணம் செய்துள்ளேன்.

ஆனால் நாங்கள் இருவரும் நிறைய பேசியுள்ளோம். அப்போது நாங்கள் எங்களுடைய வயதையே மறந்து பேசியுள்ளோம். அந்த நேரத்தில் தான் புரிந்தது, வயது முக்கியமில்லை என்ற பின்னரே திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியுள்ளார்.

நான் இன்னும் 30 ஆண்டுகள் வாழ ஆசைப்படுகிறேன். வாழ்கிற நாட்கள் அவளுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers