டொனால்டு டிரம்பிடம் பலமுறை நிறவெறியை பார்த்திருக்கிறேன்: பகீர் தகவலை கூறிய முன்னாள் பெண் ஆலோசகர்!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிடம் தான் பலமுறை நிறவெறியைப் பார்த்திருப்பதாக, வெள்ளை மாளிகையில் மூத்த ஆலோசகராக பணியாற்றிய பெண் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மூத்த ஆலோசகராக பணியாற்றியவர் ஒமரொசா மெனிகாட் நியூமேன்(44). தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இவர் 'Unhinged' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த புத்தகம் வரும் 14ஆம் திகதி வெளியாக உள்ளது. இந்நிலையில் டிரம்ப் குறித்து சில திடுக்கிடும் விடயங்களை மெனிகாட் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘டிரம்பை பற்றி மற்றவர்கள் கூறுவதை நான் முழுவதும் மறுக்கிறேன். ஏனெனில் அவரைப் பற்றி எனக்கு தெரிந்த அளவிற்கு அவர்களுக்கு தெரியாது.

அவரிடம் நிறவெறியை கண்கூடாக பார்த்திருக்கிறேன். என் காதுபட கேட்டிருக்கிறேன். அந்த வலியை நான் உணர்ந்திருக்கிறேன்.

மோதல்களையும், மக்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதங்களிலோ அல்லது சண்டையிலோ ஈடுபடுவதை டிரம்ப் விரும்புவார். மேலும், அவரது மனைவி இல்லாமல் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் அவர் ஒரு நாய் போல நடந்து கொண்டார்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வரும் 2020ஆம் ஆண்டு நடைபெற மறுதேர்தல் வரை டிரம்ப் குறித்து எதுவும் பேசக்கூடாது எனும் கட்டுப்பாடான ஒப்பந்தம் ஒன்றை, டிரம்பின் வழக்கறிஞர்கள் மெனிகாட்டிற்கு அனுப்பினர்.

அதில், டிரம்ப் குறித்து எதுவும் பேசாமல் இருந்தால் மாதம் 15 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மெனிகாட் அந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers