விமானத்தை கடத்திச் சென்ற ஊழியர்! நடுவானில் வெடித்து சிதறியது

Report Print Arbin Arbin in அமெரிக்கா
717Shares
717Shares
ibctamil.com

அமெரிக்காவின் சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து மன நலம் பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் விமானத்தை கடத்திச் சென்று கோர விபத்தில் சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சியாட்டில் நகரத்தில் அமைந்துள்ள Tacoma விமான நிலையத்தில் இருந்தே குறித்த ஊழியர் அலாஸ்கா விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்றை கடத்திச் சென்றுள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் ஒரு நொடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை கடத்திச் சென்ற அந்த நபரின் பெயர் ரிச் என மட்டுமே தெரிய வந்துள்ளது.

விமானம் கடத்தப்பட்டதும் உடனடியாக விமானப்படை பிரிவு களமிறங்கியது. இரண்டு ராணுவ விமானம் கடத்தப்பட்ட விமானத்தை தொடர்ந்து சென்றது.

இதனிடையே விமானத்தை செலுத்த போதிய அறிவில்லாத அவர் அந்த பயணிகள் விமானத்தை வைத்து ஆகாயத்தில் சாகசம் காட்ட முயற்சித்துள்ளார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் ஆகாயத்தில் இருந்து நிலை தடுமாறி Ketron தீவு அருகே விழுந்து நொறுங்கியுள்ளது.

விமானம் கடத்தப்படும்போது பயணிகள் எவரும் அதில் இல்லை என்பதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி விமானத்தை கடத்திய அந்த 29 வயது நபர் ஒரு மன நோயாளி எனவும், தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி பேசி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்