13 பேரை பலிகொண்ட படகு விபத்து: வீடியோ வெளியானது

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் Missouri பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் படகு ஒன்று மூழ்கி 13 பேரை பலி கொண்ட சம்பவத்தின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

31 பேருடன் சென்ற அந்த படகு புயலில் சிக்கி மூழ்கியது.

படகு மூழ்கியதில் நீரில் மூழ்கி பலியான 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 14 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் நான்கு பேரைக் காணவில்லை. தொடர்ந்து அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மணிக்கு 60 மைல் வேகத்தில் காற்று வீசியதே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இன்னொரு படகில் சென்ற ஒருவர் இச்சம்பவத்தை படம்பிடித்துள்ளார்.

அதில் படகு தண்ணீரில் சிக்கி தத்தளிப்பதும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்குவதும் படமாக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்