நியூயார்க்கில் திடீரென்று வெடித்த நீராவிக் குழாய்: போக்குவரத்து பாதிப்பு

Report Print Balamanuvelan in அமெரிக்கா

நியூயார்க்கின் முக்கிய சாலை ஒன்றில் பூமிக்கடியில் பதிக்கப்பட்டிருந்த நீராவிக் குழாய் ஒன்று திடீரென்று வெடித்ததில் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

நல்ல வேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் Flatiron மாகாணத்திலுள்ள ஐந்தாவது நிழற்சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் இன்னும் சில இடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதனால் பல சாலைகள் மூடப்பட்டுள்ளன.

மூச்சுத்திணறல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அந்த பகுதியில் வசிப்பவர்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்