அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியாவுக்கு காலக்கெடு இல்லை: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

Report Print Kabilan in அமெரிக்கா

வடகொரியாவுக்கு அணு ஆயுதங்களை அழிக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் வடகொரிய ஜனாதிபதி கிங் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா ஒப்புகொண்டது. அதற்காக அந்நாட்டிற்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்காவும் ஒப்புகொண்டது.

அதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது. இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையே அணு ஆயுத அழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறுகையில், ‘வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. அணு ஆயுதங்களை அழிக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. வேக உச்ச வரம்பு இல்லை.

இந்த விவகாரத்தில் அவசரப்பட தேவையில்லை. வடகொரியா மீதான பொருளாதார தடைகள் தொடர்கின்றன. அங்கு புதிதாக ஆயுத சோதனை எதுவும் நடைபெறவில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்