ஒரே நாளில் 2 லொட்டரிகளில் பரிசு வென்ற அதிர்ஷ்ட பெண்மணி: என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பெண் ஒருவருக்கு ஒரே நாளில் இரண்டு லொட்டரிகளில் பரிசு விழுந்துள்ளதால் வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணம் என தெரிவித்துள்ளார்.

மொன்டானா மாகாணத்தில் உள்ள Kalispell பகுதியை சேர்ந்தவர் Cheyenne Long. இவர் கடந்த ஒன்றாம் திகதி 3 Power Play Gold Crossword லொட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.

அதில் ஒரு டிக்கெட்டுக்கு 2,000 டொலர் பரிசு விழுந்துள்ளது. இதனையடுத்து அடுத்த சீட்டையும் பரிசு விழுந்ததா என அவர் பரிசோதித்துள்ளார்.

ஆனால் வியக்கவைக்கும் வகையில் அவருக்கு இரண்டாவது சீட்டில் முதல் பரிசான 75,000 டொலர் பரிசு விழுந்துள்ளது.

இந்த நாளை தமது வாழ்நாளில் மறக்க முடியாது என கூறியுள்ள Cheyenne Long, இந்த பணத்தில் தமது கடன்களை அடைக்க இருப்பதாகவும், எஞ்சிய பணத்தில் விமான ஓட்டியாக பயிற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொழில்முறை விமான ஓட்டியாக வேண்டும் என்பது தமது கனவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...