தொடர்ந்து கொந்தளிக்கும் ஹவாய் எரிமலை: நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

Report Print Kabilan in அமெரிக்கா

ஹவாய் தீவில் கடந்த இரண்டு மாதங்களாக எரிமலை தொடர்ந்து வெடித்து வரும் நிலையில், வானத்தில் இருந்து தெரியும் ஒரே எரிமலை இதுதான் என்று அதிர்ச்சி புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

மத்திய பசுபிக் கடல் அருகே இருக்கும் ஹவாய் தீவில், கிலாயூ எரிமலை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெடிக்க தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வரிசையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த எரிமலை இரண்டு மாதங்களாக வெடித்து வந்தது. நேற்றும் இந்த எரிமலை வெடித்துடன் இதுவரை 23 முறை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் எரிமலை குழம்பு பரவி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், இந்த எரிமலையின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அதன்படி வானத்தில் இருந்து தெரியும் ஒரே எரிமலை இதுதான் என்று நாசா கூறுகிறது.

இந்த புகைப்படம் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. எரிமலை வெடிப்பினால் வெளியேறும் தீக்குழம்புகள் மக்கள் இருப்பிடத்தை நோக்கி வருவதுடன், அவர்கள் வெளியேறும் பகுதியையும் மூடி விட்டது.

இந்நிலையில், எத்தனை பேர் மரணமடைந்தனர் மற்றும் காயமடைந்தனர் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்