வடகொரியாவால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்: டிரம்ப்பின் திடீர் அறிவிப்பு

Report Print Fathima Fathima in அமெரிக்கா

வடகொரியா அமெரிக்காவுக்கு அசாதாரணமான மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த 12ம் திகதி வடகொரியா- அமெரிக்கா ஜனாதிபதிகளின் சந்திப்பு சிங்கப்பூரில் நடந்தது.

உலக அமைதிக்கான ஒரு அங்கமாக இந்த சந்திப்பு பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்கர்கள் நிம்மதியாக தூங்கலாம், இனி அச்சுறுத்தல் இல்லை என டிரம்ப் கூறினார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் டிரம்ப் சமர்பித்துள்ள அறிக்கையில், அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த காரணத்தினால் அப்போதைய ஜனாதிபதியான ஜார்ஜ் டபிள்யூ புஷ் அரசு பொருளாதார தடைகளை கொண்டு வந்தது.

தற்போது பேச்சுவார்த்தை நடந்து முடிந்த சூழலிலும், அசாதாரணமான அபரிமிதமான அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே தடைகள் தொடர்ந்து அமுலில் இருக்க வேண்டும், அத்துடன் நெருக்கடி நிலையை ஓராண்டுக்கு நீட்டிக்கவும் முடிவு செய்துள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...