தம்பியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அக்கா: அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் அக்காவே தம்பியை காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் Debby Zutant. டெப்பிக்கு 3 வயதின் போது அவரது பெற்றோர் அவரை விட்டுச் சென்றனர். இதனால் அவர் வளர்ப்புப் பெற்றோரிடம் வளர்ந்தார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தனது நிஜப் பெற்றோரைக் கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்துள்ளார்.

டெப்பிக்கு ஜோ என்ற தம்பி இருந்துள்ளார். அவரைப் பார்த்ததும் டெப்பிக்கு அவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு பாலியல் உறவு வரை நீடித்துள்ளது. பின்னர் இருவரும் தங்கள் விருப்பத்தை பகிர்ந்து கொண்டதனை அடுத்து பெற்றோருக்கு தெரியாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு குபாவில் வைத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இதுகுறித்து கூறிய டெப்பி, பல வருடங்களாக வளர்ப்பு பெற்றோரிடம் வளர்ந்த நான், ஜோவைப் பார்த்ததும் சகோதர் என்ற உணர்வு எனக்கு வரவில்லை.

அதே உணர்வு தான் ஜோவிற்கும். தற்பொழுது நாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறோம் என்று டெப்பியும் ஜோவும் தெரிவித்தனர்.

தற்போது 50 வயதாகும் டெப்பியும் 36 வயதாகும் ஜோ பார்ன்சும் ப்ளோரிடா மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers