ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவிப்பு

Report Print Vijay Amburore in அமெரிக்கா

மனித உரிமை மீறல்களை பாதுகாக்கும் அவையாக ஐநா செயல்படுவதால், ஐ.நா கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

உலக நாடுகளுக்கிடையே அமைதியை கொண்டுவரும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் என்னும் அமைப்பு கடந்த 2006-ம் ஆண்டு நிறுவபட்டது.

ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இந்த அமைப்பில் 47 நாடுகளை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

இந்த அமைப்பு பொதுவாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலே இருந்து வருவதாக பல நாட்டு தலைவர்களும் குற்றம் சுமத்தி வந்த நிலையில், ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகுவதாக அமெரிக்கா திடீர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது..

இதுகுறித்து அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறுகையில், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில், மனித உரிமை மீறல்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், நாடுகளுக்கிடையேயான பிரச்னையின்போது அரசியல் பாகுபாடு காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் அமெரிக்காவின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஐ.நா கவுன்சிலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

அமெரிக்காவின் இத்தகைய அறிவிப்பு சர்வதேச அரசியல் நோக்கர்கள் பலரிடையே கடுமையான அதிருப்தியினை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் செய்து அல் உசைன் அமெரிக்கா வெளியேறியிருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers