பூனையை கால்பந்து போன்று எட்டி உதைத்த இளைஞர்: 30 அடி தூரம் விழுந்த அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் பூனையை கால்பந்து போன்று எட்டி உதைத்த இளைஞர் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Kansas நகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இருக்கும் கால்பந்தாட்ட மைதானத்தில் இளைஞர் ஒருவர் கருப்பு நிற பூனை ஒன்றை நிற்க வைத்து, அதன் பின் வேகமாக ஓடி வந்து பூனையை கால்பந்தை உதைப்பது போன்று உதைக்கிறார்.

இதில் பூனை சுமார் 20-30 அடி தூரம் வரை போய் விழுந்து துடித்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியதால், அந்த இளைஞர் யார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவரைப் பற்றி தகவல் தெரிந்தால், உடனடியாக உள்ளூர் பொலிசாருக்கு தெரிவிக்கும் படியும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers