அமெரிக்காவின் பிரபல இளம் ராப் பாடகர் படுகொலை - அதிர்ச்சியில் இசை உலகம்

Report Print Trinity in அமெரிக்கா

அமெரிக்காவில் பிரபல இளம் ராப் பாடகர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள deerfield பகுதியில் நேற்று தனது பிஎம்டபிள்யூ காரில் பிரபல இளம் பாடகரான XXXTentacion என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் இவரது காரை நெருங்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி விட்டனர்.

அவர்களில் ஒருவன் சிவப்பு நிற முகமூடி அணிந்திருந்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் கூறினர்.

இந்த சம்பவம் முடிந்த உடன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தனது ஸ்டியரிங் வீலில் விழுந்தபடி அந்த பாப் பாடகர் இருப்பது போன்ற புகைப்படமும் மற்றும் அவரது நாடி பிடித்து அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை பரிசோதித்த புகைப்படம் ஒன்றும் தற்போது பரவலாக பரவி வருகிறது.

தனது இளம் வயதினிலே மிக உத்வேகமான எழுச்சியான பாடல்களை பாடியவர் இந்த 20 வயதேயான XXXTentacion. இவரது பாடல்கள் அங்குள்ள அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு உத்வேகத்தை கொடுப்பதாக இருந்திருக்கிறது. பிரபல பாடகர்கள் மற்றும் பாடகிகளும் இந்த இளம் கலைஞருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

இந்த செய்தி கேள்விப்பட்டதும் XXXTentacion மீதான இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

சம்பவம் நடந்த போது பல முறை சுடப்பட்ட சத்தம் கேட்டதாக சாட்சிகள் கூறினர். மேலும் பாடகரை சுட்டுவிட்டு அவரது விலையுயர்ந்த காரிலிருந்து ஒரு பை ஒன்றை குற்றவாளிகள் எடுத்து போனதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

காவல்துறை இப்போது இந்த கொலைக்கு காரணம் அவரிடம் உள்ள பொருளை கொள்ளையடிக்கும் நோக்கத்திற்காக செய்யப்பட்டிருக்கிலாம் என்று கூறி வருகிறது.

இருப்பினும் விசாரணை தொடர்கிறது. மேலும் குற்றவாளிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 3000 டாலர்கள் பரிசு என்றும் அறிவித்திருக்கிறது.

வளர்ந்து வரும் இளம் பாடகரை இழந்த இசை உலக ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...