467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: பதறச் செய்யும் வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா
65Shares

ஹவாய் தீவின் Kilauea எரிமலைக் குழம்பு 467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காமல் ஆக்ரோஷமாக சீறிப்பாயும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மே மாதம் 3-ஆம் திகதி முதல் எரிமலைக் குழம்பைக் கொப்புளித்துவரும் Kilauea எரிமலை இதுவரை 467 வீடுகளை நாசம் செய்துள்ளது.

வெளியாகியுள்ள வீடியோவில் எரிமலையிலிருந்து வெளியாகும் எரிமலைக் குழம்பு, ஒரு ஆறு போல ஆக்ரோஷமாக சீறிப்பாயும் காட்சி அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

lower East Rift Zone பகுதியிலுள்ள எட்டாவது பிளவிலிருந்து இந்த எரிமலைக் குழம்பு வெளியாகி ஓடி வருவதாக Hawaiian Volcano Observatory அமைப்பு தெரிவித்துள்ளது.

Kapoho வளைகுடா பகுதியில் கடலுடன் கலக்கும் எரிமலைக் குழம்பு பயங்கரமான அமிலப்புகையை வெளியிட்டு வருகிறது.

எரிமலைக் குழம்பு கடல் நீருடன் கலப்பதால் உருவாகும் நீராவி, தீவின் உள் மற்றும் தெற்கு பகுதிகளை மறைத்துள்ளதாக Hawaiian Volcano Observatory அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்