பிரபல ஹாலிவுட் நடிகையும், ஐ.நா சபையின் சிறப்பு தூதருமான ஏஞ்சலினா ஜோலி, ஈராக்கில் உள்ள சிரியா அகதிகள் முகாமை பார்வையிட்டார்.
ஹாலிவுட்டின் பிரபல நடிகையான ஏஞ்சலினா ஜோலி, ஐ.நா சபையின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள சிரியா அகதிகள் முகாமை இவர் பார்வையிட்டுள்ளார்.
சிரியா உள்நாட்டு போரால் பெண்களும், குழந்தைகளும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளான நிலையில், ஈராக்கில் அகதிகளாக நுழைந்தனர். அவர்களை முகாமில் சந்தித்த ஏஞ்சலினா, அங்கிருந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஏஞ்சலினா ஜோலி கூறுகையில், ‘முகாமில் உள்ளவர்களுக்கு முறையான குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. முதலுதவிக்கு கூட மருந்துகள் இல்லை.
ஐ.நாவின் உதவியுடன், இவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நான் இங்கு வந்துள்ளேன். இங்குள்ள மக்கள் உயிரை தவிர அனைத்தையும் இழந்து விட்டனர்’ என தெரிவித்துள்ளார்.
அகதிகள் முகாமில், அடிப்படை வசதிகள் மற்றும் வர்த்தக வசதிகளை ஏற்படுத்த ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையம் நிதியுதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
UNHCR Special Envoy Angelina Jolie visits Mosul#Iraq pic.twitter.com/XlYZmu6nFy
— Press TV (@PressTV) June 16, 2018
