வடகொரியாவுடனான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் தென் கொரியா- அமெரிக்கா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடும் என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கடந்த 12ம் திகதி அமெரிக்கா- வடகொரியா ஜனாதிபதிகள் சந்தித்த வரலாற்று நிகழ்வு நடந்தது.
இதுகுறித்து பேசிய டிரம்ப், தென் கொரியாவுடன் போர் பயிற்சியை நிறுத்துவது தொடர்பான யோசனையை வடகொரியா ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது முன்வைத்தேன்.
போர் பயிற்சி நடத்துவதற்கு அதிக செலவு ஆவதால், இதனை தெரிவித்தேன்.
ஒருவேளை அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் மீண்டும் போர் பயிற்சி தொடங்கும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.
சிங்கப்பூரில் சந்திப்பின் போது வடகொரியாவுக்கு ஏராளமான சலுகைகளை அளித்ததால் பொய் செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது.
அதில் நாங்கள் உலக அமைதியை ஏற்படுத்தியுள்ளோம், இதனால் பல நன்மைகள் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.