இந்திய மாணவர் கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியான உண்மை

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவரது குடும்பத்தாரின் 4 ஆண்டு போராட்டத்திற்கு நீதி கிடைத்துள்ளது.

இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்கிய வழக்கில் அமெரிக்கர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் இந்திய வம்சாவளி மாணவரான பிரவிண் வர்க்கீஸ்(19).

இவர் கடந்த 2014-ம் ஆண்டு திடீரென மாயமான நிலையில் 5 நாட்களுக்கு பின்னர் அவர் விபத்தில் மரணம் அடைந்து விட்டதாக கார்பன்டேல் பகுதி பொலிசார் அறிவித்தனர்.

ஆனால் இளைஞர் பிரவிண் மரணம், விபத்தினால் நிகழ்ந்தது அல்ல என்று அவரது குடும்பத்தினர் கருதினர்.

அவர்கள் தனிப்பட்ட முறையில் மருத்துவர்ர்களை கொண்டு நடத்திய பிரேத பரிசோதனையின் முடிவு, கார்பன்டேல் பகுதி பொலிசார் ஏற்பாட்டில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து முரண்பட்டது.

இதனையடுத்து வர்க்கீஸ் குடும்பத்தினர், கார்பன்டேல் பகுதி பொலிசார் மீது வழக்கு தொடுத்தனர்.

அதன்பின்னர் 12 பேர் கொண்ட நடுவர்கள் விசாரணையில் இந்த வழக்கில் 19 வயதான Gaege Bethune என்ற தெற்கு இல்லினாய்ஸ் இளைஞர் சிக்கினார்.

சம்பவத்தன்று இரவு வர்க்கீசை ஒரு வாகனத்தில் அழைத்து சென்று உள்ளார் Bethune. அப்போது கொகைன் போதைப்பொருள் வாங்க பிரவிண் வர்க்கீஸ் விரும்பி உள்ளார்.

அது தொடர்பாக இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டு உள்ளது. அதில் பிரவீண் வர்க்கீசை பெதுனே சரமாரியாக தாக்கி உள்ளார். அதில் அவர் உயிரிழந்தார்.

தற்போது Bethune மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் அவருக்கு 20 முதல் 60 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப் படலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers