பிரபல ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் குற்றசாட்டு: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report Print Trinity in அமெரிக்கா
70Shares
70Shares
ibctamil.com

சமீபத்தில் ஹாலிவுட் பிரபலங்கள் பலர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியதை அடுத்து அவர்கள் அது நிரூபணமும் ஆனதால் தண்டனையும் கிடைத்துள்ளது. இதில் மார்கன் ஃப்ரீமேன் தனது குற்றங்களை ஒப்பு கொண்டார். அந்த வரிசையில் தற்போது இன்னொரு ஹாலிவுட் பிரபலமும் சிக்கியிருக்கிறார்.

பிரபல ஹாலிவுட் நடிகரான ஸில்வர்ஸ்டர் ஸ்டாலோன் மீதுதான் தற்போது இந்த புகார் கூறப்பட்டுள்ளது. இவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ஒருவரை கூறியுள்ள நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட அட்டர்னி இந்த வழக்கை எடுத்து விசாரித்து வருகின்றனர்.

அந்த பெண் புகார் கொடுத்தது நியாயமே இல்லை என்று சில்வர்ஸ்டர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர். 1990களில் அவருடன் விரும்பி உறவு கொண்டு விட்டு இத்தனை வருடங்களுக்கு பிறகு அவரது பெயரை கெடுக்க முனைவது சரியல்ல என்று வழக்கறிஞர் மாற்றின கூறியிருக்கிறார்.

விசாரணை தொடர்ந்த்து நடைபெற்று வருகிறது.

சில்வர்ஸ்டற்கு தற்போது 71 வயதாகிறது. இவர் ராம்போ போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்தவர். ராக்கி படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. உடற்கட்டு என்றாலே அது சில்வர்ஸ்டன் தான் என்பது போல பல நடிகர்களின் 6 பேக்கிற்கு ரோல் மாடலாக திகழ்ந்தவர் சில்வர்ஸ்டன் ஸ்டாலோன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்