ஓடும் காரில் மோசமாக நடந்துகொண்ட பெண்கள்: பின் ஓட்டுநர் செய்த காரியம்

Report Print Kabilan in அமெரிக்கா
603Shares
603Shares
ibctamil.com

அமெரிக்காவில் ஓடும் காரில் 2 பெண்கள் எல்லை மீறி நடந்துகொண்டதால், காரின் ஓட்டுநர் அவர்களை கீழே இறக்கி விட்ட சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அலெக்ஸ் லோவின்(26), எம்மா பிச்ல்(24) என்ற இரண்டு பெண்கள், தங்களது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக டாக்ஸி ஒன்றில் சென்றுகொண்டிருந்தனர்.

டாக்ஸியை அகமது இல் பவுதாரி என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது இரண்டு பெண்களும் ஒருவரையொருவர் அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் இருவரும் எல்லை மீறி நடந்துகொண்டனர்.

இதனை கவனித்த கார் ஓட்டுநர் அவர்களை எச்சரித்தார். ஆனால், அவர்கள் தொடர்ந்து எல்லை மீறி நடந்து கொண்டதால் கோபமடைந்த ஓட்டுநர், அவர்களை காரில் இருந்து கீழே இறக்கி விட்டார்.

இதனைத் தொடர்ந்து, இரு பெண்களும் Call டாக்ஸி விதியை மீறி, தங்களை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியேற்றியதாக, ஓட்டுநரின் மீது டாக்ஸி நிறுவனத்திடம் புகார் அளித்தனர்.

அதன் பின்னர், அந்த ஓட்டுநரின் கார் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தவறான செயலில் ஈடுபட்ட லோவின், எம்மா இருவரும் Lesbian என்பதும், 2 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்