ஆபரேஷனுக்கு நடுவில் நடனமாடும் மருத்துவர்: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா

பிளாஸ்டிக் சர்ஜன் ஒருவர் தனது பேஷண்டுகளுக்கு ஆபரேஷன் செய்யும்போது ஆபரேஷனுக்கு இடையே பாட்டுப்பாடி நடனமாடும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஆபரேஷன் செய்யும் அறையில் பேசினால் வாயிலிருந்து கிருமிகள் வெளியாகும் என்பதால்தான் மருத்துவர்கள், நர்ஸ்கள் அனைவரும் வாயில் மஸ்க் அணிந்து கொள்வர்.

ஆனால் அட்லாண்டாவைச் சேர்ந்த Dr Windell Boutte என்னும் மருத்துவர் மாஸ்க் அணியாமல் பாட்டுப்பாடியபடி நடனமாடுவதும் இடையிடையே பேஷண்டுக்கு ஆபரேஷன் செய்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதில் அதிர்ச்சிக்குரிய விடயம் என்னவென்றால் இது அவரது முதல் வீடியோ அல்ல. 20க்கும் மேற்பட்ட வீடியோக்களை அவர் யூடியூபில் பதிவேற்றியுள்ளார்.

சமீபத்தில் Ojay என்பவரின் தாயான Icilma தனது வயிற்றிலிருந்த கொழுப்பை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்காக Dr Windell Boutteஇடம் வந்திருந்தார்.

மீண்டும் ஒரு திருமண வாழ்வை தொடங்கவும் PhD பட்டம் பெறவும் இருந்த நிலையில் அவர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் முடிவை எடுத்தார்.

எட்டு மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை மேசையிலேயே கவனிப்பாரற்று விடப்பட்டதால் Icilmaயின் இதயம் துடிப்பை நிறுத்தியது.

தற்போது அவரைக் கவனித்துக் கொள்வதற்கு யாராவது உடன் இருந்தாக வேண்டும் என்னும் நிலைமையில் அவர் இருக்கிறார்.

ஏற்கனவே 2013ஆம் ஆண்டு சிகிச்சைக்கு வந்த ஒரு பெண் நோய்த்தொற்றுக்கு உள்ளானது பிரச்சினையாயிற்று.

அதன் விளைவாக அவரது தலையில் நிரந்தரமாக தழும்புகளைச் சுமக்க வேண்டியதாயிற்று. தற்போது மீண்டும் Dr Windell Boutteமீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

மயக்க நிலையில் பேஷண்ட் படுத்திருக்க கையில் கத்தியுடன் அவ்வப்போது ஆபரேஷன் செய்யும் டாக்டரும் நர்ஸ்களும் நடனமாடும் காட்சியைக் காணும்போது கோபம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்