திருடச் சென்ற இடத்தில் திருடனுக்கு அடித்த அதிர்ஷ்டம்: அந்த இடத்திலே ஆட்டம் போட்ட வீடியோ

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் திருடச் சென்ற இடத்தில், தன்னுடைய முதல் முயற்சியிலே கடையின் கதவுகள் திறந்ததால், மகிழ்ச்சியில் திருடன் ஆட்டம் போட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரபல கடை ஒன்றில் கடந்த 13-ஆம் திகதி திருடன் ஒருவன் இரவு நேரத்தில் திருடச் சென்றுள்ளான்.

அப்போது தன்னுடைய முதல் முயற்சியிலியே கதவுகள் திறந்துவிட்டதால், சற்றும் இதை எதிர்பார்க்காமல் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்று அந்த இடத்தில் ஜாலியாக பிரேக் டான்ஸ் ஆடியுள்ளான்.

அதன் பின் பணம் போன்றவைகளை திருடிச் சென்றுள்ளான். இதையடுத்து மறுநாள் காலையில் கடையின் உரிமையாளர் கதவை திறந்து பார்த்த போது, பணம் போன்றவைகள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், பொலிசார் அங்கிருக்கும் சிசிடிவி காமெராவை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

அதில், கடையின் உள்ளே திருட வந்த திருடன், மகிழ்ச்சியில் ஆடுவது தொடர்பான வீடியோ காட்சிகள் இருந்துள்ளது. இதனால் குறித்த வீடியோவை வைத்து பொலிசார் திருடனை தேடி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்