ஹவாய் தீவில் வாயுக்களுடன் கரும்சாம்பலை வெளியேற்றும் எரிமலை: வான்வழி போக்குவரத்து பாதிப்பு

Report Print Raju Raju in அமெரிக்கா
70Shares
70Shares
lankasrimarket.com

ஹவாய் தீவில் கிலாயூ எரிமலை கரும்சாம்பலை வெளியேற்றி வருவதால் வான்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கிலாயூ எரிமலை கடந்த 12 நாட்களுக்கு முன்னர் வெடிக்க தொடங்கிய நிலையில் தற்போது சுமார் 12 ஆயிரம் அடி உயரத்திற்கு கரும்சாம்பலை வெளியேற்றி வருகிறது.

கரும்சாம்பல், ரசாயன வாயுக்கள் தொடர்ந்து வெளியேறலாம் எனவும் அறிவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து வான்வழி போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதை குறிப்பிடும் வகையில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே எரிமலையில் இருந்து லாவா குழம்புகள் வெளியேறியதால் அப்பகுதியிலிருந்து 2 ஆயிரம் குடும்பத்தினர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்