11 வயது சிறுமியை 60 வது முறை கொடூரமாக குத்திய பரிதாபம்: சிரித்து கொண்டே பொலிசாருடன் சென்ற தாய்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் பெற்ற மகளையே தாய் 60 முறை கொடூரமாக குத்தியதால், அந்த சிறுமி தற்போது உயிருக்கு போராடி வருகிறார்.

அமெரிக்காவின் Oklahoma-வின் Tulsa பகுதியைச் சேர்ந்தவர் Taheerah Ahmad . 39 வயதான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகளால் கடும் கோபத்தில் இருந்த இவர், தன்னுடைய மூன்று குழந்தைகளின் கைகளை கட்டிவிடுவது, அவர்களை ஒரு இடத்தில் அடைத்து வைப்பது என்று இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 11 வயது மகள் ஏன் அம்மா இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதால், ஆத்திரத்தில் அந்த சிறுமியை கத்தியால் வைத்து 50-லிருந்து 60 முறை கொடூரமாக குத்தியுள்ளார்.

அதன் பின் கோடாரியில் முட்ட வைத்து, வீட்டின் சமயலறையை எரித்துவிட்டு, வீட்டின் பின்புறம் உள்ள பார்க்கிங்கில் தன்னுடைய 8 வயது மகளுடன் ஓடிச் சென்று சுமார் 17 மணி நேரம் ஒழிந்துள்ளார்.

அதன் பின் இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், குழந்தைகளால் கடும் அதிருப்தியில் இருந்த இவர், குழந்தைகளின் வாயில் டேப்பை வைத்து ஓட்டிவிடுவது, கையை கட்டிவிடுவது என்று செய்துள்ளார்.

இதை 11 வயது சிறுமி எதிர்த்து கேட்டதால், இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்ட மற்றொரு 9 வயது மகள் அங்கிருந்து தப்பி தங்களுடைய உறவினரின் வீட்டில் சென்று கூறியுள்ளார்.

அதன் பின்னர் அவர்கள் வந்து பார்த்த பின்பு பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வந்த நாங்கள் அவரை தேடிய போது கிடைக்கவில்லை, சுமார் 17 மணி நேரத்திற்கு பின்னர் வீட்டின் பின்புறம் ஒளிந்திருப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்த பின்பே அவரை கைது செய்தோம்.

அவருடன் இருந்த 8 வயது சிறுமியை மீட்டுள்ளோம். விசாரணையிலும் அவர் தான் 60-வது முறை குத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், மகளை கொடூரமாக குத்தியதன் காரணமாக பொலிசார் அவரது கையில் விலங்கை மாட்டி அழைத்துச் சென்ற போது சிரித்த படி சென்றுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்