இரண்டு குழந்தைகளை வெட்டி கொன்ற பெண்: சாகும் வரை சிறை

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளை வெட்டிக் கொன்ற பெண்ணிற்கு, சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கெவின் கிரீம் மற்றும் மரினா கிரீம் ஆகிய தம்பதிகளின் இரண்டு குழந்தைகள், யோசிலின் ஆர்டிகா(55) எனும் பெண்மணியின் பராமரிப்பில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மரினா கிரீம் தனது வீட்டை திறந்து பார்த்தபோது, வீட்டின் குளியலறையில் அவரது 6 வயது மகள், 2 வயது மகன் இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தனர்.

இதனைக் கண்டு மரினா அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து, பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், குழந்தைகளை பராமரித்த பெண் ஆர்டிகாவை கைது செய்தனர்.

கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குழந்தைகளின் பெற்றோர் ஆர்டிகாவுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆர்டிகாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்