மூச்சை கொடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய பொலிஸ்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Fathima Fathima in அமெரிக்கா

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உயிருக்கு போராடிய பிஞ்சு குழந்தையின் உயிரை பொலிஸ் அதிகாரி ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதில், கடந்த புதன்கிழமை உள்ளூர் நேரடிப்படி மாலை 5.30 மணியளவில் Ocala நகரில் உள்ள சாலையில் கார் ஒன்று எச்சரிக்கை விளக்கை எரியவிட்டபடி சென்றது.

இதனை கவனித்த பொலிஸ் அதிகாரியான Jeremie Nix தனது காரை நிறுத்துகிறார்.

முன்னால் இருந்த காரில் பச்சிளம் குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு, தாய் ஒருவர் பதறியபடி ஓடி வருகிறார்.

குழந்தையை கையில் வாங்கிய Jeremie Nix தன்னுடைய மூச்சை கொடுத்து, முதலுதவிகள் செய்கிறார்.

இருப்பினும் குழந்தையின் உடலில் அசைவுகள் ஏதும் இல்லாததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதுடன் வீடியோ முடிகிறது.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர் குழந்தை உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ மட்டுமின்றி குழந்தையுடன் பொலிஸ் அதிகாரி எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகியுள்ளன.

பலரும் பொலிஸ் அதிகாரியின் மனிதாபிமானத்தை பாராட்டியும் வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers