சாலையில் விழுந்து நொறுங்கிய சரக்கு விமானம்: பயணிகள் அனைவரும் பலி!

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்க ராணுவத்தின் சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியா மாகாணத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் சி -130 ஹெர்குலஸ் சரக்கு விமானமானது புதன்கிழமை காலை 11.30 மணியளவில் ஜோர்ஜியா மாகாணத்தில் உள்ள பரபரப்பான நெடுஞ்சாலை ஒன்றில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளான நேரம் குறித்த நெடுஞ்சாலையில் எந்த வாகனமும் இல்லாமல் இருந்தது மேலதிக உயிர் சேதத்தை தவிர்த்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விமானத்தில் முதலில் 5 பேர் பயணம் செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதில் 9 பேர் பயணம் செய்துள்ளதாக ஜோர்ஜியா அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த குறித்த விமானம் அரிசோனா மாகாணம் நோக்கி புறப்பட்ட நிலையிலேயே விபத்தில் சிக்கியுள்ளது.

ஆனால் விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதியான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

விமானம் விழுந்து நொறுங்கியதும் தீப்பற்றி எரிந்ததாகவும், அந்த பகுதியானது மிகவும் அதிர்ச்சி தரும் வகையில் காட்சியளித்ததாகவும் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

விமான விபத்தை அடுத்து அப்பகுதி வழியாக செல்லும் ரயில் சேவையை ரத்து செய்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers