உலகை உலுக்கிய இரட்டை கோபுரம் தகர்ப்பு வழக்கில் தீர்ப்பு

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

நியூயார்க்கில் 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது.

இதில் ஆயிரத்திற்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு முக்கிய குற்றவாளியான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த தாக்குதல் குறித்து வழக்கு விசாரணை நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஈரான் மற்றும் சவுதியை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

மேலும், இந்த சம்பவத்திற்கு ஈரான் அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில் உலகை உலுக்கிய இந்த இரட்டை கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர், கணவன்மார், உடன்பிறந்தவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரான் அரசிற்கு நியூயோர்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த இழப்பீடானது தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. மனைவியருக்கு 12.5 million டொலர் வழங்க வேண்டும். பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு 8.5 million டொலர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு 4.25 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers