அமெரிக்க பாதுகாப்பிற்காக டிரம்ப் எடுத்திருக்கும் அதிரடி முடிவு

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அமெரிக்க பாதுகாப்பிற்காக, Space Force எனப்படும் விண்வெளி படையை உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், ‘அமெரிக்க இராணுவ படையில் தற்போது 5 பிரிவுகள் உள்ளன. தரைப்படை, விமான படை, 2 கடற்படை, ஒரு கடலோரக் காவல்படை ஆகியவை இருக்கின்றன.

இந்த படைகள் மட்டும் இல்லாமல், இதனுடன் 6வதாக Space Force எனப்படும் விண்வெளி படையும் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான திட்டம் எல்லாம் தயாராக உள்ள நிலையில், அனுமதிக்காக மட்டும் காத்திருக்கிறோம்.

இப்போது உலக நாடுகள், தனியார் நிறுவனங்கள் விண்வெளி துறையில் சிறந்து விளங்குகின்றன. அவர்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் பிரச்சனை செய்யலாம்.

அதேபோல் எங்காவது ஒரு கிரகத்தில் புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டு, அவை நம் மீது போர் தொடுக்க கூட வரலாம். இதை எல்லாம் தடுக்கத்தான் இந்த விண்வெளி படையை உருவாக்க இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில் ‘மற்ற படைகளுக்கு மிகவும் பயிற்சி அளித்து ஆட்களை எடுப்பது போலவே இதற்கும் ஆட்களை எடுக்க இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் சாதாரண பயிற்சிகளால் பெறாமல் புதிய பயிற்சிகளை பெறுவார்கள்.

இவர்களுக்காக புதிய ஆயுதங்கள் உருவாக்க வேண்டும். புதிய தொழில்நுட்பம் மூலம் இந்த மொத்த படையும் வடிவமைக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான ‘பென்டகன்’, இப்போதைக்கு Space Force உருவாக்கும் எண்ணம் இல்லை என்று கூறிவதுடன், டிரம்ப்பின் முடிவிற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.

மேலும், பூமியில் இருக்கும் ஐந்து படைகளிலும் தன்னிறைவு பெற்று, போர் பயம் சென்ற பின்னர், விண்வெளி படை குறித்து ஆலோசனை செய்யலாம் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது. அத்துடன், செனட் சபையும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்காது என்று கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...