புயலில் சிக்கிய விமானம்! சாகப் போவதாக குறுந்தகவல் அனுப்பிய பயணிகளின் திக் திக் நிமிடம்

Report Print Santhan in அமெரிக்கா

சவுத்வெஸ்ட் ஏர்லைன் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புயலில் சிக்கியதால், விமானத்தில் இருந்த பயணிகள் தங்கள் குடும்பத்தினருக்கு விமானம் மோதப் போகிறது என்று தகவல் அனுப்பியதாக கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் Fort Lauderdale பகுதியிலிருந்து New Orleans-க்கு Southwest Airlines நிறுவனத்திற்கு சொந்தமான 3461 என்ற விமானம் பயணிகளுடன் கடந்த ஞாயிற்றுக் கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளது.

அப்போது திடீரென்று மோசமான வானிலையுடன் கடுமையான புயலில் சிக்கியுள்ளது. இதனால் நிலைதடுமாறிய விமானம் ஒரு நேர்கோட்டில் செல்லாமல் அங்கும், இங்கும் அலைபாயந்த படி சென்றுள்ளது.

அதுமட்டுமின்றி விமானத்தில் ஒன்றுமே தெரியாத காரணத்தினால், பயணிகள் பீதியடைந்துள்ளனர். இதில் ஒரு சிலர் கண்ணீர் விட்டு அழுததுடன், வாந்தியும் எடுத்துள்ளனர்.

விமானம் எங்கோ சென்று மோதப் போகிறது, நாம் உயிர் பிழைப்பது கஷ்டம் என்று கூறி, தங்களுடைய உறவினர்களுக்கு குட் பை எங்கள் விமானம் மோதப் போகிறது என்று குறுந்தகவல் அனுப்பியுள்ளனர்.

இருப்பினும் விமானத்தை சாமர்த்தியமாக கையாண்ட விமானி எங்கும் மோதவிடாமல் Panama-வில் பத்திரமாக தரையிரக்கி அங்கு விமானத்திற்கு தேவையான பெட்ரோலை நிரப்பி விட்டு New Orleans-ல் நான்கு மணி நேரம் தாமதமாக தரையிரக்கியுள்ளார்.

விமானத்தில் இருந்து தரையிரங்கியவுடன் பயணிகள் கூறுகையில், இது ஒரு மறக்க முடியாத அனுபவம், விமானத்தில் இருந்த ஸ்பீக்கரில் பெல்ட்டுகளை இறுக்கி போடும் படி அறிவுறுத்தப்பட்டது, என்ன நடக்கிறது ஒன்றும் புரியாத காரணத்தினால் என் குடும்பத்தினருக்கு கடைசியாக goodbye என்ற தகவல் அனுப்பினேன், நாங்கள் உயிர் பிழைத்தது எல்லாம் அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும் என விளக்கியுள்ளார்.

இது குறித்து விமான நிறுவனம் கூறுகையில், New Orleans-ல் கடுமையான மழை மற்றும் மோசமான புயல் காரணமாக விமான ஓட்டுனருக்கு சரியான சிக்னல் கிடைக்கவில்லை.

அதுமட்டுமின்றி விமானம் புயலில் சிக்கியதால் சற்று நேரம் விமான ஓட்டுனர் கட்டுப்பாட்டாளர்களின் சிக்னல் கிடைக்கு வரை சாமர்த்தியமாக விமானத்தை கையாண்டார்.

புயல் காரணமாக விமானம் தொடர்ந்து வட்ட மடித்த படி இருந்ததால் Panama-ல் தரையிரக்கப்பட்டு அங்கு பெட்ரோலை நிரப்பிவிட்டு அதன் பின் நான்கு மணி நேரம் தாமதமாக New Orleans-ல் தரையிரக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்புதான் முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers