இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்: உண்மை சம்பவம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றிய சம்பவம் மருத்துவர்களையே ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது.

அமெரிக்காவின் Kansas பகுதியைச் சேர்ந்தவர் Heather Hendershot (25).

சமீபத்தில்தான் ஒரு குழந்தைக்கு தாயான Heather தன் உடல் நலத்தை கண்காணிப்பதற்காக ஆப்பிள் வாட்ச் ஒன்றை வாங்கியிருந்தார்.

கடந்த மாதத்தில் ஒரு நாள் Heatherஇன் வாட்ச் திடீரென்று அவரது இதயத்துடிப்பு அதிகரித்திருப்பதன் அடையாளமாக எச்சரிக்கை ஒலி எழுப்பத் தொடங்கியுள்ளது.

தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை உறுதியாக நம்பும் Heather, வாட்சில் ஏதோ கோளாறு என்று எண்ணி அலாரத்தை ஆஃப் செய்து விட்டார்.

ஆனால் வாட்ச் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒலி எழுப்பவே அவரது கணவர் அந்த வாட்சை தான் வாங்கி அணிந்து பார்த்திருக்கிறார்.

அப்போது வாட்ச் ஒலி எதுவும் எழுப்பவில்லை, எனவே அவர் தனது மனைவியை வற்புறுத்தி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரத்தப் பரிசோதனைகள் செய்தார்கள்.

அதிர்ச்சியூட்டும் விதமாக அவருக்கு Hyperthyroidism என்னும் பிரச்சினை இருப்பது தெரிய வந்தது.

பொதுவாக Hyperthyroidism இருந்தால் உடலில் பல அறிகுறிகள் காணப்படும், ஆனால் Heatherக்கு எந்த அறிகுறியும் இல்லை.

அவரது வாட்ச் மட்டும் சமிக்ஞை கொடுக்காதிருந்தால் அவர் தனது பிரச்சினையை கவனிக்காமலே விட்டிருப்பார், அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும்.

பொதுவாக மருத்துவர்கள் இதுபோன்ற வாட்சுகளை நம்புவதில்லை.

அவை தவறாக ஒலி எழுப்பி தேவையற்ற மன அழுத்தத்தை உண்டாக்கி இதய துடிப்பை அதிகரிக்கச் செய்துவிடும் என்று பல மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் அது தவறு என்று ஆப்பிள் வாட்ச் நிரூபித்திருக்கிறது, Heatherஇன் விடயத்தில் அது அவரது உயிரையே காப்பாற்றியிருக்கிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்