தந்தை- மகள் தகாத உறவால் பிறந்த குழந்தை: அனைவரையும் கொன்ற அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் பெற்ற மகளுடன் உறவு வைத்து தந்தை குழந்தை பெற்ற நிலையில் மொத்த குடும்பத்தையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஸ்டீவன் ப்ளாடில் (43) என்பவர் அல்யிசா என்ற தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில், அவர்களின் மகள் கேட்டி ப்ளாடில் (20) சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வந்தார்.

கேட்டிக்கு 18 வயதான போது சமூகவலைதளங்களை பயன்படுத்தி தனது பெற்றோரை கடந்த 2016 கண்டுப்பிடித்துள்ளார்.

அந்த சமயத்தில் ஸ்டீவனுக்கும், அல்யிசாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

Credit: CCBI

இதையடுத்து தந்தை ஸ்டீவனுடன் கேட்டி ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

அப்போது தந்தை மகள் உறவு என்பதையும் மீறி இருவருக்குள்ளும் தகாத உறவு ஏற்பட்டது.

இதன்பின்னர் ஸ்டீவனும், கேட்டியும் கடந்தாண்டு திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இது போன்ற தவறான உறவில் குழந்தை பெற்றெடுத்தது அந்நாட்டு சட்டப்படி தவறு என்பதால் ஸ்டீவன் மற்றும் கேட்டியை பொலிசார் கைது செய்து அவர்கள் மீது நீதிமன்ற விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் இருவருமே நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தனர்.

தந்தையும் மகளும் இனி ஒருவரையொருவர் பார்த்து கொள்ளக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த சூழலில் ஸ்டீவன் இரு தினங்களுக்கு முன்னர் கேட்டி வீட்டுக்கு சென்று அவரையும், தன் மூலம் அவருக்கு பிறந்த குழந்தையையும் சுட்டுக்கொன்றுள்ளார்.

அங்கிருந்த கேட்டியின் வளர்ப்பு தந்தையையும் கொலை செய்த ஸ்டீவன் பின்னர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தன்னை விட்டு கேட்டி பிரிந்து சென்றுவிட்டாரே என்ற கோபத்தில் ஸ்டீவன் இருந்த நிலையிலே இச்செயலை செய்துள்ளார்.

வீட்டிலிருந்த அனைத்து சடலங்களையும் கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்