பள்ளி மாணவனுடன் ஆசிரியைக்கு தகாத உறவு: வீடியோவை வெளியிட்ட மாணவன்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் பள்ளி மாணவனுடன் தலைமை ஆசிரியைக்கு தகாத உறவு இருந்த நிலையில், குறித்த மாணவன் வெளியிட்ட வீடியோவால் விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Ohio மாகாணத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவனுடன், தலைமை ஆசிரியை கோர்ட்னி அல்பர்ட் (39)-க்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் அடிக்கடி உறவு கொண்டதுடன், இதை தனது கணவரிடம் சொல்லாமல் இருக்க மாணவனுக்கு அல்பர்ட் பணம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், இந்த உறவை விரும்பாத மாணவன் இது குறித்து பொலிசில் தெரிவித்துள்ளான்.

மேலும் இது சம்மந்தமான வீடியோ மற்றும் மெசேஜ் ஆதாரங்களையும் பொலிசாரிடம் மாணவன் கொடுத்துள்ளான்.

இதையடுத்து பொலிசார் அல்பர்ட்டை கைது செய்தனர். ஆனால் நீதிமன்றத்தில் தான் தவறு எதுவும் செய்யவில்லை என அல்பர்ட் கூறியுள்ளார்.

அல்பர்ட் தற்போது $25,000 பணத்துக்கான ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான அடுத்தக்கட்ட நீதிமன்ற விசாரணை வரும் 16-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்