ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தேனா? டிரம்ப்பின் பதில்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஆபாச நடிகை ஒருவருக்கு பணம் கொடுத்ததாக எழுந்த சர்ச்சைக்கு முதல் முறையாக பதிலளித்துள்ளார்.

ஸ்டாமி டேனியல்ஸ் என்ற ஆபாச பட நடிகையுடன் டிரம்ப் தொடர்பு வைத்துக் கொண்டதாகவும், இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு வெளியில் பேசாமல் இருக்க, தமது வழக்கறிஞர் மூலமாக 8.4 மில்லியன் டொலர் வழங்கியதாகவும் செய்தி வெளியானது.

மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து, டொனால்டு டிரம்ப் கருத்து எதுவும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டிரம்ப் கூறுகையில், ஆபாச நடிகைக்கு பணம் வழங்கப்பட்டதில் தமக்கு எதுவும் தெரியாது என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Getty Images
AP Photo/Evan Vucci

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்