அமெரிக்காவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பெண் தனது காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவை சேர்ந்தவர் லவுரின் லாங். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.
பின்னர் எலும்பு, கல்லீரல் மற்றும் நுரையீரலிலும் நோய் பரவியுள்ளது.
இதற்காக லாங் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நோய் பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் லாங்குக்கு மைக்கேல் பேங்க் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

லாங்கின் நோயை பொருட்படுத்தாமல் மைக்கேல் அவரை தீவிரமாக காதலித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட நிலையில், மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டவர்களும் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினார்கள்.
லாங் எந்த நிலையில் இருந்தாலும் அவர் தான் என்னுடைய உயிர் என மைக்கேல் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.