கொடிய நோயால் சிக்கித் தவிக்கும் ஒரு வயது மகன்: தாயின் பாசத்தைக் கண்டு கண்ணீர் விட்ட செவிலியர்கள்

Report Print Santhan in அமெரிக்கா
164Shares

அமெரிக்காவில் கொடிய நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மகனை நினைத்து தாய் பாசத்துடன் பாடிய பாடலைக் கண்டு அங்கிருந்த செவிலியர்கள் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியைச் சேர்ந்தவர் Abigail. இவருக்கு ஒரு வயதில் Lincoln என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் Lincoln-க்கு சமீபத்தில் Malignant Migrating Partial Seizures of Infancy என்ற கொடிய நோய் தாக்கியதால், குழந்தையின் தாய் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார்.

Malignant Migrating Partial Seizures of Infancy நோய் என்பது சிறு வயதில் வரக் கூடிய கொடிய வலிப்பு நோய் எனவும், இந்த நோய் கொஞ்சம் கொஞ்மாக அதிகரித்து உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரை பறித்துவிடும் எனவும் எப்படிப்பட்ட சிகிச்சை அளித்தாலும் இறப்பை தள்ளிப் போட முடியுமே தவிர நிரந்தரமாக அந்த நோயை குணப்படுத்துவது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.

மகன் இது போன்ற நோயால் பாதிப்புக்குள்ளானதால், Abigail கரோலினாவில் இருக்கும் Duke Cancer Center-க்கு சிகிச்சைக்காக சென்று வந்துள்ளார்.

அது போன்ற சமயத்தில் மருத்துவருக்காக வார்டில் காத்துக் கொண்டிருந்த போது Abigail தன் மகனை நினைத்து மிகவும் மனம் உறுகி The Greatest Show man என்ற படத்தில் வரும் Never Enough என்ற பாடலை பாடியுள்ளார்.

அவரின் பாசத்தைக் கண்ட அங்கிருந்த செவிலியர்கள் கைதட்டியதுடன் உணர்ச்சியை அடக்க முடியாமல் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்