அமெரிக்காவில் அறுவை சிகிச்சையின் போது பெண் ஒருவர் புல்லாங் குழல் வாசித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் அண்ண ஹென்றி. தொழில் முறை இசை கலைஞரான இவர் கடந்த சில மாதங்களாக மூளிஅ நரம்பு நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த வாரம் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அப்போது அவர் தன் உடலில் இருந்த பிரச்சனையை பற்றி கவலைப்படாமல் பல ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்து வந்த புல்லாங்குழலை ஊதினார்.
மூளை அறுவை சிகிச்சை செய்யப்படுவதால், நரம்பு பாதிக்கப்படுகிறதா என்பதையும், தன் கைகள் புல்லாங்குழலை பற்றக்கூடிய சக்தி இருக்கின்றதா என்பதை அறுவை சிகிச்சை நேரத்திலேயே தெரிந்து கொள்ள விரும்பினார்.
இதற்கு மருத்துவர்களும் அனுமதி அளித்தால் அவர் அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசியுள்ளார். அது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.