மகனுக்காக தாய் பாடிய மனதை நெகிழச் செய்யும் பாடல்: வைரலாகும் வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா
225Shares

அமெரிக்காவின் தென் கரோலினாவில் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மகனுக்காக Abby Tanner என்னும் பெண் பியானோ இசைத்து பாடும் பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lincoln என்னும் அந்த ஒரு வயது குழந்தை ஒரு அபூர்வ வகை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்.

ஒரு நாளைக்கு 200 முறை வலிப்பு வரும் அவனுக்கு தற்போது சிகிச்சையின் காரணமாக அது குறைந்து ஒரு நாளைக்கு 20 முறை வலிப்பு ஏற்படுகிறது.

தொடர் சிகிச்சையின்போது தனது மகனை ரிலாக்ஸ் செய்வதற்காக Abby Tanner அந்தப் பாடலை இசைத்தார்.

மூன்று நிமிடங்கள் அவர் அந்தப் பாடலை இசைத்து முடித்தவுடன் பலத்த கரவொலி எழுந்ததும்தான் நிமிர்ந்து பார்க்கிறார் Abby Tanner, அங்கே கூட்டமாக நர்ஸ்கள் நின்று அவரது பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் இந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

இதுவரை 215,000 பேர் அந்த வீடியோவைப் பார்த்திருக்கிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்