ரஷ்யாவிற்கு கெட்ட செய்தி : டொனால்டு டிரம்ப் விடுத்த தகவல்

Report Print Kabilan in அமெரிக்கா
228Shares

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ரஷ்யாவிடம் தன்னை விட கடுமையாக நடந்து கொண்டவர்கள் யாரும் இல்லை என தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை, அமெரிக்கா - ரஷ்யா தொடர்பான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு, அமெரிக்க வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தலைவர்களுடனான சந்திப்பில் டிரம்ப் கூறுகையில்,

‘என்னைக் காட்டிலும் ரஷ்யாவிடம் கடுமையாக நடந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. மேலும், இதற்கிடையில் ரஷ்ய ஜனாதிபதி புதினுடன் நல்ல முறையில் உறவில் இருப்பது ஆரோக்கியமான விடயம்.

ஆனால், ரஷ்யாவும், சீனாவும் சேர்ந்து இருப்பது நல்ல விடயம்தான். எதிர்மறையானது கிடையாது. நாம் இப்போது மிகுந்த சக்தி வாய்ந்த நாடாக இருக்கிறோம்.

நாம் நமது ஆற்றல் ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கிறோம். இது ரஷ்யாவுக்கு சாதகமானதல்ல. ஆனால், அது நிச்சயமாக அமெரிக்காவுக்கு சாதகமான விடயம்.

நமது ராணுவம் முன்பு இருந்ததைவிட பலமானதாக மாறப் போகிறது. இதுவும் ரஷ்யாவுக்கு உகந்த செய்தி அல்ல என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்