அமெரிக்க பங்கு சந்தையில் நுழைந்த புதிய நிறுவனம்: பிழையில் முடிந்த வரவேற்பு

Report Print Gokulan Gokulan in அமெரிக்கா

பங்குச்சந்தை பட்டியலில் புதிதாக இடம்பெறப் போகும் ஸ்வீடன் நிறுவனமான spotify க்கு வித்யாசமான வரவேற்பை கொடுத்திருக்கிறது வால் ஸ்ட்ரீட்.

இந்த நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதற்காக வால் ஸ்ட்ரீட் நேற்று தயார் நிலையில் இருந்தது.

இந்த அசாதாரண நிகழ்வை தொழிநுட்ப ஊடகங்கள் கூர்மையாக கவனித்து வந்தது

spotify நிறுவனத்தை வரவேற்கும் வகையில் சுவிஸ் நாட்டின் கொடியான சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடி ஒன்று வால் ஸ்ட்ரீட்டில் பறக்க விடப்பட்டது.

ஆனால் spotify நிறுவனமோ ஸ்வீடன் நாட்டைத் தன் தலைமையிடமாகக் கொண்டது.

இந்தத் தவறை உடனே திருத்திய நிர்வாகம் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான ஸ்வீடனின் கொடியைப் பறக்க விட்டது.

இந்தப் பிழையை சரி செய்ய சில நிமிடங்களே ஆகியிருந்தாலும் அதற்குள் ஸ்காண்டிநேவிய twiiter வலைத்தளம் இந்த நிமிடங்களைக் கைப்பற்றிக் கொண்டது.

நடைபெற்ற தவறை ஒப்புக் கொள்ளும் ஒரு Spotify செய்தித் தொடர்பாளர், இது குறித்த தன் கருத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இதுபற்றி பேசுகையில் "நாங்கள் இன்று ஒரு சிறிய தவறு செய்துவிட்டோம்," என்று நியூயார்க் பங்குச் சந்தையின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டன் கௌஸ் கூறினார்.

ஸ்வீடனின் உள்ளூர் ஆங்கில மொழி வலைத்தளம் ஒன்று நடந்த தவறு பற்றிக் கருத்துக் கூறுகையில் ஸ்வீடனுக்கும் சுவிஸ்குமான குழப்பங்கள் ஒன்றும் புதிதானது அல்ல இரு நாட்டு மக்களிடையே யாரைக் கேட்டாலும் சற்று குழப்பத்துடன்தான் தலையசைப்பார்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

நண்பகலுக்குப் பிறகு, தொடங்கிய பங்குவர்த்தகத்தில் சுமார் $ 33 பில்லியனாக மதிப்பிடப்பட்ட இந்நிறுவனத்தின் தொடக்க விலை $ 165.90 ஆக இருந்தது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்