சட்டவிரோதமாக குடியேறுவதைத் தடுக்க டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கை

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவதைத் தடுக்க, மெக்சிகோ-அமெரிக்கா இடையே சுவர் எழுப்பும் வரை, எல்லையில் ராணுவத்தை நிறுத்த போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

மெக்சிகோ நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும், அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறுவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதனைத் தடுக்க மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் மிக உயர்ந்த கான்கிரீட் சுவர் எழுப்பபோவதாக, தேர்தலின் போது டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், எல்லையில் திட்டமிட்டபடி சுவர் எழுப்பும் வரை, ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்