50 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து: 87 வயதில் மீண்டும் மலர்ந்த காதல்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவின் Kentucky மாகாணத்தில் 50 வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்துகொண்ட தம்பதியினர் தற்போது வயதான காலத்தில் மீண்டும் திருமணம் செய்துகொண்டனர்.

Harold Holland(87) - Lillian Barnes(78) ஆகிய இருவரும் 1955 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் 5 பிள்ளைகள் இருந்தனர். பின்னர் இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1967 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.

விவாகரத்துக்கு பின்னர் இருவரும் வெவ்வேறு திருமணம் செய்துகொண்டனர். காலங்கள் சென்றது. சமீபத்தில் தம்பதியினர் இருவரும் சந்தித்துக்கொண்டனர். இருவரது வாழ்க்கை துணையும் இறந்துவிட்டதால், ஏற்கனவே கணவன் மனைவியாக இருந்த இவர்களது மனதுக்குள் அன்பு மலர்ந்துள்ளது.

தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர். ஏப்ரல் 14 ஆம் திகதி இவர்களது பிள்ளைகள் முன்னிலையில் தேவாலயத்தில் வைத்து திருணம் செய்துகொள்ளவிருக்கின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்