யூ டியூப் தலைமை அலுவலகத்தில் இளம் பெண் சரமாரி துப்பாக்கிச் சூடு

Report Print Santhan in அமெரிக்கா
307Shares

கூகுள் நிறுவனத்தில் பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பொலிசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. எனினும் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

இதுகுறித்து கூறியுள்ள கூகுள் நிறுவன சி.இ.ஓ. `இன்று ஏற்பட்ட சோகத்தை விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் ஊழியர்களுக்கு ஆதரவாக இருப்போம். போலீஸ் உட்பட உதவியவர்கள் அனைவருக்கும் நன்றி'' எனப் பதிவிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

அமெரிக்காவில் யூ டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தினை வடக்கு பகுதியில் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து 11 மைல் தொலைவில் உள்ள சான் பருனோ என்ற இடத்தில் சமூக வலைதளமான யுடியூப் தலைமை அலுவலகம் உள்ளது.

இங்கு நேற்று மதிய வேளையில் ஊழியர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியது இளம் பெண் தான் எனவும், அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவுடன் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது சம்பவத்தின் போது அங்கிருந்த நபர் ஒருவர் கூறுகையில், பெண் ஒருவர் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவருடைய காதலனை நோக்கி முதலில் அவர் சுட்டதாகவும், அதன் பின் ஊழியர்களை நோக்கி சுட்டதாகவும் கூறியுள்ளார்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட முறை சுட்டதால், அலுவலகத்தின் படிகள் முழுவதும் இரத்தங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சம்பவத்தை அறிந்தவுடன் சில நிமிடங்களில் பொலிசார் அப்பகுதிக்கு விரைந்துவிட்டதாகவும், அலுவலகத்தின் உள்ளே இருக்கும் ஊழியர்களை பத்திரமாக மீட்டு வருவதுடன், வேறு யாரேனும் உள்ளே இருக்கிறார்களா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை எனவும், பெண் தான் துப்பாக்கிச் சுடு நடத்தியதாக கூறப்பட்டாலும், அதை இன்னும் உறுதி செய்யவில்லை என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்