5 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொன்ற கொடூரன்: கதறும் பெற்றோர்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் நண்பனின் 5 வயது மகளை கடத்திச் சென்று பாலியல் துஷொபிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 27 வயது சக்கரி ஆண்டர்சன் என்ற இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மினசோட்டா மாகாணத்தில் உள்ள வாட்கின்ஸ் பகுதியில் இருந்து சம்பவத்தன்று சிறுமியும் குறித்த இளைஞரும் மாயமானதாக கூறப்படுகிறது.

முந்தைய நாள் ஆண்டர்சன் சிறுமியின் தந்தையான Matt Ertl என்பவரது குடியிருப்பில் இரவு தங்கியுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியுடன் மாயமான ஆண்டர்சன், சிறுமியின் தந்தையை தொடர்பு கொண்டு, இவர்களுக்கு சொந்தமான வேறொரு குடியிருப்பை பயன்படுத்தலாமா என அனுமதி கேட்டுள்ளார்.

மட்டுமின்றி சிறுமியின் குடும்பத்தாருக்கு சொந்தமான வாகனம் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து தமது நண்பரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிறுமியின் தந்தை, உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. மாயமானதாக கருதப்பட்ட சிறுமியின் உடல் பூங்கா ஒன்றில் இருந்து பொலிசார் மீட்டனர்.

உடற்கூறு சோதனைக்கு உட்படுத்தியதில், சிறுமியின் தலையில் பலத்த காயமேற்பட்டு அதனாலையே உயிர் பிரிந்ததாக தெரிய வந்தது.

மட்டுமின்றி சிறுமியை ஆண்டர்சன் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளதும் அதில் தெரியவந்தது. இதனிடையே தற்கொலைக்கு முயன்ற நிலையில் ஆண்டர்சனை பொலிசார் மீட்டு கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் ஆண்டர்சனுக்கு பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கொலை குற்றம் தொடர்பாக ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்