மனைவி தொல்லையிருந்து தப்பிக்க கணவன் செய்யும் செயல்: சுவாரசிய சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் மனைவியிடம் திட்டு வாங்குவதை விட, சிறை தண்டனையே மேலானது என்று எண்ணி ஒரு கணவர் அடிக்கடி சிறை சென்று வருகிறார்.

கன்சாஸ் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் ஜான் (71). இவர் மனைவியிடம் திட்டுவாங்குவதை விட, சிறை தண்டனையே மேலானது என்று எண்ணி அடிக்கடி சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

வங்கி கொள்ளை முயற்சியில் பொய்யாக ஈடுபட்டு 6 மாத சிறை தண்டனை அனுபவித்தவர், சமீபத்தில் தான் விடுதலையானார்.

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே மற்றொரு வழக்கில் தன்னை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார்.

இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், லாரன்ஸ் நல்ல மனிதர். குற்றங்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. மனைவியிடம் சண்டையிடுவதை தவிர்க்கவும், பழி பேச்சுகளை தவிர்க்கவுமே சிறைத்தண்டனைக்கு உள்ளாகிறார்.

தொடர்ந்து தவறு செய்யாமல் பொய் சொல்லி சிறை தண்டனை அனுபவிக்கும் ஜானுடன், அவர் மனைவியை சமாதானப்படுத்தும் முயற்சியாக பொலிசார் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்