உடனடியாக நாடு கடத்தப்படுவீர்கள்! தேவாலயத்துக்குள் குடும்பத்துடன் தஞ்சம் புகுந்த நபர்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

ஐந்து குழந்தைகளின் தந்தையான 30 வயது Jesus Berrones தனது கர்ப்பிணி மனைவியையும் புற்றுநோய் பாதித்த மகனையும் விட்டு விட்டு நாடு கடத்தப்பட உள்ளார்.

மெக்சிகோவை சேர்ந்த Jesus Berrones ஒன்றரை வயதாக இருக்கும்போது அவரது பெற்றோருடன் அமெரிக்கா வந்தார். அவர் முறையான அனுமதி பெற்று வந்தாரா என்பது தெரியவில்லை.

அவர் 19 வயதாக இருக்கும்போது போலி லைசென்ஸ் பயன்படுத்தி வாகனம் ஓட்டியதால் மெக்சிகோவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

அரிசோனாவில் வாழும் தனது குடும்பத்துடன் இணைவதற்காக இரண்டு முறை அவர் சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைந்தார்.

அவரது 5 வயது மகனுக்கு இரத்தப் புற்று நோய் இருப்பதாக 2016 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவனுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Berronesஇன் மகனுக்குப் புற்று நோய் இருப்பதால், ICE என்று அழைக்கப்படும் Immigration and Customs Enforcement தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் தனது மகனுடன் இருக்க அனுமதி அளித்தது. இருமுறை இவ்வாறு அனுமதியளிக்கப்பட்டது, அவர் மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராவார்.

ஆனால் கடந்த ஆண்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அவர் மீண்டும் அமெரிக்காவில் தொடர்ந்து தங்கியிருப்பதற்காக விண்ணப்பிக்கச் சென்றபோது அது தேவையில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் திடீரென்று அவர் நாடு கடத்தப்படுவார் என்று ICE நோட்டீஸ் அனுப்பியது. உடனடியாக அவர் மறு விண்ணப்பம் செய்ய அது மறுக்கப்பட்டது.

அலைக்கழிக்கப்பட்ட Berrones, அமெரிக்கக் குடிமக்களான தனது கர்ப்பிணி மனைவியையும் நோய் பாதித்த மகனையும் விட்டுப் பிரிய மனமில்லாமல் Phoenixஇலுள்ள Shadow Rock United Church of Christஇல் தஞ்சம் புகுந்துள்ளார்.

Shadow Rock United Church of Christ, நாடு கடத்தப்பட உள்ள புலம் பெயர்ந்தோருக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு தேவாலயமாகும்.

தேவாலயங்களுக்குள் சென்று ICE யாரையும் கைது செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.

Berrones நாடு கடத்தப்பட்டால், அப்பா எங்கே என்று கேட்கும் பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வேன் என்று கலங்கி நிற்கிறார் அவரது மனைவியான Sonia.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்