38 ஆண்டுகளுக்கு பின்னர் தாயுடன் இணைந்த மகள்: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Athavan in அமெரிக்கா

அமெரிக்காவில் தன்னை பெற்றெடுத்து தத்து கொடுத்த தாய் தனக்கு அருகாமையில் இருப்பதை 38 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடித்து இருவரும் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுளது.

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த பிரான்ஸைன் சிம்மன்ஸ் தனது 14 வயதில் கர்ப்பிணியாக இருந்த போது இவரது காதலன் கைவிட்டு சென்றுவிட்டார்.

அதன்பின்னர் காப்பகம் ஒன்றில் சேர்ந்து தனது பதினைந்தாம் வயதில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தனக்கு பிறந்த மகளை அந்த வயதில் வளர்க்க வசதி இல்லாததால் அந்த காப்பகத்தின் பொறுப்பில் மகளை ஒப்படைத்துவிட்டு பிழைப்பு தேடி சென்று விட்டார். அக்குழந்தைக்கு காப்பக நிர்வாகிகள் லா-சோன்யா மிச்சேல் கிளார்க் என்று பெயர் சூட்டினர்.

மேலும் அந்த பெண் குழந்தையை சிறு வயதிலேயே ஒரு தம்பதியருக்கு தத்து கொடுத்துவிட்டனர். அந்த தம்பதியரின் செல்ல மகளாக வளர்ந்துவந்த போதிலும் தான் தத்தெடுக்கப்பட்ட மகள்தான் என்பதை அறிந்து கொண்ட சோன்யாவுக்கு இப்போது 38 வயது ஆகின்றது.

தத்தெடுத்த பேற்றோர் நிஜ பெற்றோரை போல பாசத்தை ஊட்டி வளர்த்தாலும், நீண்டகாலமாக சோன்யாவின் மனதில் ‘நம்மை பெற்ற தாயின் முகத்தை ஒருமுறையாவது பார்க்க மாட்டோமா..?’ என்ற ஆசையும் ஏக்கமும் தொடர்ந்து இருந்து வந்தது. ஆனால், அவரை எப்படி, எங்கு தேடுவது? என்ற பெருங்குழப்பம் சோன்யாவை ஆட்டுவித்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 1964-ம் ஆண்டுக்கும் 1996-ம் ஆண்டுக்கும் இடையில் ஓஹியோ மாநிலத்தில் பிறந்தவர்களின் பட்டியலை அம்மாநில அரசு வெளியிட்டது.

அதில் அனாதைகள் காப்பகத்தில் பிறந்த சோன்யாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த பெயருக்கு நேர் எதிரே தாயாரின் பெயர் பிரான்ஸைன் சிம்மன்ஸ் என்று இடம்பெற்றிருந்தது.

இதை துருப்பாகவைத்து ‘பேஸ்புக்’கில் தேடியபோது சோன்யாவுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவர் தற்போது பணிபுரியும் கால் சென்டரான இன்போசிஷன் நிறுவனத்தில் தான் தனது தாயும் வேலை செய்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றார். மேலும் தனது தாயின் வீட்டிற்க்கும் தனக்கும் 6 நிமிட பயணதூரம் தான் என்பதையும் அறிந்து கொண்டார்.

எப்படியோ தனது தாயின் செல்போன் நம்பரை மூன்றாண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்து ’நான் உங்கள் மகள் என்று நினைக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க வரலாமா?’ என சோன்யா கேட்க போனிலேயே அவரது தாய் கதறி அழுதுள்ளார்

இறுதியாக, தாயும் மகளும் முதன்முறையாக சந்தித்துக் கொள்ள, தனது பிறப்புக்குப் பின்னர் பிரான்ஸைன் சிம்மன்ஸ்-க்கு வேறொரு கணவரின் மூலம் பிறந்த 3 மகள்கள் இருப்பதை அறிந்த சோன்யா பெரும் மகிழ்ச்சியடைந்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்