மீனின் வயிற்றை கிழித்த போது உள்ளே இருந்த அதிர்ச்சி பொருட்கள்: வெளியான வீடியோ

Report Print Santhan in அமெரிக்கா
1659Shares

கோஸ்டா ரிகாவில் மீனின் வயிற்றை கிழித்து பார்த்த போது, அதன் உள்ளே பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரீபியனுக்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது Costa Rica. இங்கு மீனவர் ஒருவர் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

அப்போது டால்பின் வகை இனமான Mahi Mahi என்ற மீன் சிக்கியுள்ளது. அந்த மீனின் வயிற்றை அவர் வெட்டிய போது, உள்ளே பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பாட்டில் மூடி, சீப்பு, சிகரெட் பற்ற வைக்க பயன்படுத்தப்படும் லைட்டர் மற்றும் சிறிய வகை வாசனை திரவியங்களின் பிளாஸ்டிக் டப்பாக்கள் போன்றவை இருந்துள்ளன.

இதை அந்த நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டதுடன், இதை பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதன் மூலம் பிளாஸ்டிக்கினால் சுற்றுப்புற சூழல் எவ்வளவு கெட்டு வருகிறது என்பதை காண முடிகிறது என்று பலர் கூறுகின்றனர்.

மேலும் கடல் விஞ்ஞானியான Erick Ross இது குறித்து கூறுகையில், மீன்கள் கடலில் இருக்கும் பொருட்களை கண்டு உணவு என்று எண்ணி சாப்பிடுகின்றது, அப்படி பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடும் போது, அது செரிமானம் ஆவதில்லை, வயிற்றின் உள்ளேயே அப்படியே இருந்துவிடுகிறது.

இதன் காரணமாக கடலில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. வருடத்திற்கு எட்டு மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலப்பதாக தகவல்கள் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்