நியூயார்க்கில் துப்பாக்கி சூடு: மூன்று பேர் காயம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா
28Shares

நியூயார்க்கில் Empire State Building அருகே நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் காயமடைந்தனர்.

நேற்று மதியம் மதுபானக்கடை ஒன்றின் முன் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது திடீரென ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து சுட்டார்.

இதில் அப்பாவிகள் இருவர் உட்பட மூவர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் Abdoulaye Kane, 25, Ahmend Kabia, 43, மற்றும் Adrian Burduja, 29 என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மூவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என பொலிசார் தெரிவித்தனர்.

துப்பாக்கியால் சுட்டவனும் அவனது கூட்டாளியும் தப்பியோடிவிட்டனர். பொலிசார் அவர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்