தனது 5 வயது குழந்தையிடம் மாதம் தோறும் வாடகை வசூல் செய்யும் வினோத தாய்

Report Print Gokulan Gokulan in அமெரிக்கா
86Shares

தென் அமெரிக்காவில் இவான்ஸ் எனும் பெண் 5 வயது மதிக்கதக்க தன் சொந்த மகளிடமே மாதம் மாதம் 5 டொலர் வாடகையாக வசூல் செய்து வருகிறார்.

பெற்றோர்கள் அனைவரும் வெவ்வேறு விதமாக அல்லது தங்களது விருப்பத்தின் பேரிலே தங்களது பிள்ளைகளை வளர்ப்பார்கள் பிள்ளைகளும் அவ்வாறே உலகில் வளரவும் அடுத்தவர்களுடன் பழகவும் கற்றுக்கொள்ளும்.

ஆனால் பெற்றோர்கள் அன்பாகவோ அல்லது அதட்டியோ இந்த வளர்ப்பு முறையை கையாளுகின்றனர். ஆனால் இன்னும் சிலரோ வித்தியாசமான வளர்ப்பு முறையை கொண்டுள்ளனர். அவ்வாறு வித்தியாசமாக தன் குழந்தையை வளர்க்கும் முறை பற்றி அவரே கூறியுள்ளதை பார்ப்போம்.

" நான் என் மகளுக்கு மாத செலவுக்கு என $ 7 டொலர்களை கொடுக்கிறேன் அதிலிருந்து என் மகள் எனக்கு $ 1 வாடகைக்கும் $ 1 மின்சாரத்திற்க்கும் $1 உணவுக்கும் $1 தண்ணீருக்கும் மற்றும் $ 1 டி,வி - காகவும் அவள் மாதம் தோறும் என்னிடம் வாடகையாக மீண்டும் செலுத்த வேண்டும்.

மீதம் இருக்கும் $2 ல் அவள் செலவு செய்யவோ அல்லது சேமித்து வைக்கவோ அவள் விருப்பபடி செலவோ செய்யலாம்.

ஆனால் பெரியவளாகி அவள் சொந்தமாக வெளியே செல்ல முடிவு செய்தால், அவள் $ 3,380 எனக்கு செலுத்த வேண்டும்.

உண்மையான உலகம், அதில் உண்மையில் எவ்வாறு கட்டணம் செலுத்தி வாழ்கிறோம் என அவர்களுக்கு புரியவைக்க தான் இவ்வாறு செய்வதாக தெரிவித்தார்.”

இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் உள்ள நிலையில், தம் பிள்ளைகள் தம் வீட்டில் சுதந்திரமாக வசிக்க முழு உரிமை உள்ளவர்கள் ஆனால் இவ்வாறு அனுபவத்திற்க்கு பயிற்றுவித்தாலும் வாடகை எனும் பேரில் அல்லாமல் முடி திருத்தும் கட்டணம் ஆடை வாங்கும் கட்டணம் விளையட்டு சாதனம் ஆகியவை சுயமாக வங்குவது போன்று செய்யலாம் என சிலரும் அறிவுரை அளித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்