அமெரிக்காவில் பச்சை மீனை வழக்கமான உணவாக எடுத்துக் கொண்டவரின் வயிற்றிலிருந்து நாடாப்புழு வெளிவந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவர், தீவிர வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு மருத்துவமனையில் அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் உள்ளே நாடாப் புழு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இதனால் அதை வெளியேற்று மருந்து கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அளித்த சிகிச்சையின் பயனாக சுமார் ஐந்தரை அடி நீள நாடாப்புழு வெளியேறியுள்ளது.
ஜப்பானிய உணவு வகையான வேக வைக்கப்படாத பச்சை மீனைக் கொண்டு தயாரிக்கப்படும் சூஷியை நாள் தோறும் சாப்பிட்டதால், அவருக்கு இந்த குடற்புழு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் குடலில் வளரும் நாடாப்புழுக்கள் 40 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டவை என்றும் தெரிவித்துள்ளனர்.